×

சொகுசு காரில் வந்து நகை கடை ஷட்டரை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்கள்

 

ஆந்திர மாநிலம் குண்டூரில் சொகுசு காரில் வந்த கொள்ளையர்கள் நகை கடை ஷட்டரை உடைத்து 28 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரில்  லட்சுமி பிரசன்னா  வெள்ளி நகைக்கடை உள்ளது. இங்கு அதிகாலையில் வந்த ஃபார்ச்சூனர் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் நகை கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து பணத்துடன் வெள்ளி மற்றும் தங்க ஆபரணங்களை எடுத்துச் சென்றனர்.  தப்பி செல்லும் போது அதில் இருந்த ஒருவனை பொது மக்கள் பிடித்து கயிற்றால் கட்டி போலீசில் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து போலீசார்  ரூ.28 லட்சம்  மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பிடிப்பட்டவரை விசாரித்ததில் ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளை கும்பல் என தெரிய வந்தது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.