×

திருப்பதி பிரம்மோற்சவம்- ரூ.26 கோடி காணிக்கை, 30 லட்சம் லட்டுகள் விற்பனை

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது . அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சேவை செய்ததாக  செயல் அதிகாரி  ஷியாமளா ராவ் தெரிவித்தார். இதுகுறித்து திருமலை அன்னமய்யா பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷியாமளா ராவ் தேவஸ்தான ஊழியர்கள் கட்டுப்பாட்டுடனும் திட்டமிடலுன் மூத்த அதிகாரிகளின் தொடர்ச்சியான மேற்பார்வையின் கீழ் பணியாற்றியதால் தேவஸ்தான வசதிகள் குறித்து பக்தர்கள் திருப்தி தெரிவித்தனர்.

அக்டோபர் 4 முதல் 11 வரை (8 நாட்கள்) பிரம்மோற்சவத்தில்  6 லட்சம் பக்தர்கள் ஏழுமலையான் கோயிலில் மூலவரை  தரிசனம் செய்தனர். நான்கு மாடவீதியில் சாமி வீதி உலா வாகன சேவையை 15 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கருட சேவை அன்று மூலவரை  82,043 பேரும்  கருடசேவையில் சுமார் 3.5 லட்சம் பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.7 லட்சம் லட்டுகள் நிலுவையுடன் தொடர்ந்து தயாரித்து பக்தர்களுக்கு தட்டுபாடு இல்லாமல் வழங்கப்பட்டது. இதனால் 30 லட்சம் லட்டுகள் விற்பனையானது.

சாமி தரிசனம் செய்த பக்தர்கள்   ரூ.26 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர். 2.60 லட்சம்  பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்காக 32,713 அறைகள் ஒதுக்கி வாடகைக்கு வழங்கப்பட்டது. பிரம்மோற்சவத்தின் போது 475 லட்சம் கேலன் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. கல்யாணவேதிகாவில் பல்வேறு துறைகளால் நடத்தப்பட்ட பழங்கள் மற்றும் மலர்க் காட்சி, அன்று - இன்று என்று தலைப்புடன்   கூடிய புகைப்படக் கண்காட்சி, சிற்பக் கல்லூரிகள் நடத்திய கண்காட்சிகள் பக்தர்களின் பாராட்டைப் பெற்றன. திருமலையில் பல இடங்களில் சாமி சிலைகளின் மின் விளக்கு கட்அவுட்களுடன் 32 பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டது. இதில் நான்கு மாட வீதிகளில் 23, முக்கிய சந்திப்புகளில் 9, திருப்பதியில் 7 டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டது.

பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் 26 லட்சம் உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. 8.71 லட்சம் பேருக்கு அன்னபிரசாதம் மற்றும் காலை உணவும், 3.47 லட்சம் பேருக்கு டீ, காபி, பால், பாதாம் பால், 4 லட்சம் மோர் பாக்கெட்டுகள், 4 லட்சம் குடிநீர் பாட்டில்கள், சுண்டல், பிஸ்கட் ஆகியவை சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. 45 மருத்துவர்கள், 60 துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் 13 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டது. திருமலையில் சிறந்த தூய்மைக்காக  1365 பணியாளர்கள் மற்றும் கருட சேவை நாளில் கூடுதலாக 600 பணியாளர்கள் ஈடுப்பட்டு சுத்தம் செய்தனர்.

18 மாநிலங்களைச் சேர்ந்த 261 கலைக் குழுக்களில் 6,884 கலைஞர்கள் தங்கள் கலை வடிவங்களை இந்து தர்ம பிரச்சார பரிஷத் திட்டங்களின் கீழ் காட்சிப்படுத்தினர்.   ஏழுமலையான் கோயிலுடன் கூடிய பல்வேறு ஆலயங்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளில் வண்ண  மலர்களால் அலங்காரிக்கப்பட்டது.  இதற்காக  40 டன் மலர்கள், 3.50 லட்சம் கட் பிளவர்ஸ் மற்றும் 80 ஆயிரம் பருவகால மலர்கள் பயன்படுத்தப்பட்டது. சுமார் 7 மாநிலங்களில் இருந்து 4 ஆயிரம் ஸ்ரீவாரி சேவகர்களுடன் பக்தர்களுக்கு சேவை செய்தனர். முந்தைய 5 தகவல் மையங்களைத் தவிர, திருமலையில் மேலும் 5 கூடுதல் தகவல் மையங்களையும், திருப்பதியில் 2 மையங்களையும் அமைத்து பக்தர்களுக்கு 5 மொழிகள் தெரிந்தவர்கள் கொண்டு அமைக்கப்பட்டது.

இதேபோல், பக்தர்களுக்கு விரிவான தகவல்களை வழங்குவதற்காக ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் உதவியுடன் சுமார் 11 பகுதிகளில் மே ஐ ஹெல்ப் யூ கவுன்டர்களை ஏற்பாடு செய்யப்பட்டது. தேவஸ்தான இலவச அழைப்பு மையம், கட்டளைக் கட்டுப்பாட்டு மையம், தகவல் மையங்கள், ஊடகங்கள், பக்தர்கள் அவ்வப்போது தெரிவித்த கருத்துக்களை கொண்டு பக்தர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கப்பட்டது. திருமலையில் பக்தர்களை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இலவசமாக அழைத்து செல்ல 14 தர்ம ரதம் ( பஸ் )  ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்.டி.சி. பஸ்  மூலம் திருமலைக்கு 9.53 லட்சம் பேர் பயணம் செய்தனர்.

கருட சேவை அந்து  திருப்பதியில் இருந்து திருமலைக்கு 2,764 பயணங்களில் 97,402 பக்தர்களை திருமலைக்கு பயணம் செய்தனர்   திருமலையில் இருந்து திருப்பதிக்கு 2,711 பயணங்களில் 89,181 பக்தர்கள்  வந்துள்ளனர். பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்துவதில் பங்கேற்ற அனைத்து அர்ச்சகர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், கலைஞர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள் மற்றும் என்சிசி மாணவர்களுக்கு   வாழ்த்துகிறேன் என்றார். மேலும், பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகம், காவல்துறை, ஆர்.டி.சி. மற்றும் பிற அரசுத் துறைகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி, இணை செயல் அதிகாரிகள் வீரபிரம்மம், கெளதமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.