×

போலீஸ் இன்பார்மர்களாக இருந்தவர்களை கோடரியால் வெட்டிக்கொன்ற மாவோயிஸ்டுகள்

 

தெலங்கானா மாநிலத்தில் போலீஸ் இன்பார்மர்களாக இருந்தவரை மாவோயிஸ்டுகள் கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வாஜேடு மண்டலம் ஜங்கலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஏகா ரமேஷ். கிராம பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றி வரும் இவர், அரசு ஊழியராக உள்ளார். இந்நிலையில் ரமேஷ் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரமேஷ்  வனப்பகுதியில் மீன் பிடிப்பது போன்று, மாடுகளை மேய்த்து கொண்டே செல்வது போல் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்த தகவலை, போலீசாருக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளார். 

இதனால் மாவோயிஸ்ட் அமைப்பினர் நேற்று நள்ளிரவில் ஜங்கலப்பள்ளி கிராமத்திற்கு சென்று  ஏகா ரமேஷை வீட்டின் வெளியே இழுத்து வந்து கோடாரியால் கண்மூடித்தனமாக வெட்டினர். இதை தடுக்க முயன்ற அதே ஊரை சேர்ந்த அர்ஜுனையும் வெட்டி கொன்றனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர்.  பின்னர் ஒரு கடிதத்தை மாவோயிஸ்ட் விட்டு சென்றனர். அந்த கடிதம்  இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் இயக்கத்தின் வெங்கடாபுரம் வாஜேடு பகுதிக் குழுச் செயலாளரும் சாந்தாவின் எழுதியதாக கூறப்பட்டு இருந்தது. அதில்  முலுகு மாவட்டம், வாஜேடு மண்டலம், பெனுகோலு கிராமத்தைச் சேர்ந்த  ரமேஷ் போலீசாருக்கு மாவோயிஸ்ட் குறித்து நடமாட்டம் குறித்து தகவல் சேகரித்து வழங்கி வருகிறார். சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள லன்கபிள்ளா, உன்னப்பா, உட்லா, கோயினுராட்லு வாயிப்பேட்டா உள்ளிட்ட  கிராமத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் மூலம் மாவோயிஸ்ட் நடமாட்டம் தகவல் சேகரித்து போலீசாருக்கு கூறி வந்தார்.

மாவோயிஸ்ட்களுக்கு எதிரான போலீசாரின் சில தாக்குதல்களுக்கு மூலக்காரணமாக அமைந்தார். அதன் பின் அரசு வேலை கிடைத்த பிறகு வாஜேடுவில் பணியில் சேர்ந்து  வனப்பகுதியில்   மீன்பிடிப்பதாக  , வேட்டையாடுவது போல்  போலீசாருக்கு தகவல் சேகரித்து அளித்து வந்துள்ளார். பொனுகோலு மலை கிராமத்தில் தங்க வேண்டாம் என்று ரமேஷ்க்கு கிராம மக்கள் கூறினால் ரமேஷ் அவர்களை  மலையை விட்டு கீழே இறங்கும்படி கூறி வற்புறுத்தி வஞ்சித்து வந்தான். பலமுறை நடவடிக்கையை மாற்றி கொள்ள வேண்டும் என்று  கூறினாலும்  கேட்கவில்லை அதனால் தான்  ரமேஷை கொல்கிறோம் என  செயலாளர் சாந்தா எழுதியதாக கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது.  

இதற்கிடையில், இருவர் மாவோயிஸ்ட் இயக்கத்தினரால்  கொலை செய்யப்பட்ட சம்பவம் முலுகு மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் அச்சப்பட வேண்டாம் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து சில நாட்களாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், ஏற்கனவே கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில்  வியாழன் நள்ளிரவில் சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மீண்டும் மாவோயிஸ்டுகள் இருப்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில்  இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.  சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்களுக்கு கேட்டு கொண்டுள்ளனர்.