×

உத்தரகாண்ட்டில் சுரங்கம் தோண்டும் பணியின்போது நேர்ந்த விபத்து

 

உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டது. 


உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்தது. இதில், பணியில் இருந்த 36 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன, 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கானுடன் சில்க்யாராவை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது சார் தாம் சாலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு, உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. நான்கரை கிலோமீட்டர் நீளமான சுரங்கப்பாதையின் 150 மீட்டர் நீளமான பகுதி இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. சுரங்கப்பாதையை திறக்க 200 மீட்டர் தூரத்திற்கு ஸ்லாப் அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.