×

அதிகம் செலவு செய்யும் இந்தியர்கள்! வெளியான பகீர் காரணம்

 

UPI பேமண்ட் சேவையால் 74% இந்தியர்கள் அளவுக்கு அதிகமான செலவுகளைச் செய்வது தெரியவந்துள்ளது.


நாட்டில் யு.பி.ஐ (UPI) சேவையை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. யுபிஐ பயன்படுத்தி மக்கள் மிக விரைவாக எந்த விதமான கட்டணமும் இன்றி தற்போது வரை பண பரிமாற்றம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியின் இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி) பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், யூபிஐ மூலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு எளிதாக உள்ளதால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை கணக்கில் கொள்ளாமல் மக்கள் செலவுகளை செய்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் 74% பேர் UPI மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்துவதன் விளைவாக அதிகமாகச் செலவு செய்வது தெரியவந்துள்ளது.

81% பேர் தினமும் UPI ஐப் பயன்படுத்துகின்றனர், அவர்களில் சராசரியாக 15.7% பேர் தினசரி சராசரி ரூ. 200 செலவு செய்கின்றனர்.