×

சிவலிங்கத்தை திருடிய "முரட்டு சிங்கிள்"

 

உத்திரப் பிரதேசத்தில் புகழ் பெற்ற பைரோ பாபா எனும் சிவன் கோவிலில் சிவலிங்கம் திருடப்பட்ட சம்பவத்தில், சோட்டு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள பைரோ பாபா கோயிலில் இருந்து சிவலிங்கத்தை  27 வயது இளைஞர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய முயன்றபோது சிவிலிங்கம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. கிராம தலைவர் ஓம் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில் கும்ஷியாவாகாவில் இருந்து சோட்டு என்ற இளைஞரிடமிருந்து சிவலிங்கத்தை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சோட்டு தான் சிவலிங்கத்தை திருடியதை ஒப்புக்கொண்டான். தனக்கு திருமணமாக வேண்டி தினமும் விரதமிருந்து வழிபாடு செய்தும் திருமணமாகாததால் கோபத்தில் சிவலிங்கத்தை திருடியதாக போலீசாரிடம் அவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.