×

உ.பி. வாரணாசி தொகுதியில் மோடி வெற்றி

 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த நிலையில் இந்த முறை கூட்டணி அல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக 293 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை வாரணாசி தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, 2024 மக்களவைத் தேர்தல் 2024க்கான பாஜக வேட்பாளராகவும் உள்ளார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அதர் ஜமால் லாரி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டார். கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி 6 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இம்முறை ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை எவ்வளவு வெற்றி வித்தியாசமோ அதைவிட குறைவாகவே இந்த முறை வாக்குகளை பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்