×

அயோத்திக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த விமானங்கள் திடீரென நிறுத்தம்! அதிரவைக்கும் காரணம்

 

அயோத்திக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த பல்வேறு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு உலகம் எங்கிலும் இருந்து பக்தர்கள் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன.  சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையும் உள்ளது

அயோத்தி ராமர் கோவில் திறந்து 7 மாதங்களே ஆகியுள்ள நிலையில், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 13 நகரங்களிலிருந்து இயக்கப்பட்டு வந்த தினசரி விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அயோத்திக்கு விமான சேவையை தொடங்க சர்வதேச விமான நிறுவனங்களும் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.