×

வயநாடு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு தொடக்கம்

 

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தேவையான இடங்களை கைப்பற்றி, எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்த கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரபபேலி உள்ளிட்ட 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதி காலியான நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 16 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். சிபிஐ சார்பில் சத்யன் மொகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். இதேபோல் நாடு முழுவதும் 34 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.