×

ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழில் தங்க, வெள்ளி சிலைகள்!

 

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண பத்திரிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியினரின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரன் மெர்சென்டின் மகளான ராதிகா மெர்சென்ட்டுக்கும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது. 3ஆம் தேதி சுப ஆசிர்வாத நிகழ்வும், 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.