×

வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 316 ஆக உயர்வு.. 

 

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோரின் நிலைமை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை என கூறப்படுகிறது.  

கேரள மாநிலம் வயநாட்டில்   ஜூலை 30 - செவ்வாய்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால்  சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் சூரல்மலா கிராமமே மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.  சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும், வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான  நிலச்சரிவில் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தது.   இதனையடுத்து தேரிய பேரிடர் மீட்பு படை, மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீஸார் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என பலர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற மீட்பு பணியில் 316 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 6000க்கும் மேற்பட்டோர் நலமுடன் மீட்கப்பட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளிலும், மீதமுள்ளவர்கள் மாநிலம்  முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 82 நிவாரண முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் முண்டக்கை, மேப்பாடி சூரல்மலை ஆகிய இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.