×

சந்திரபாபு நாயுடு நிலைப்பாடு என்ன?  10 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு 

 

ஆந்திராவில் உள்ள  175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில் தேர்தலில்  160 தொகுதிகளை கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சி,  பாஜக , ஜனசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில்   தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும்,  ஜனசேனா 20 தொகுதிகளிலும் , பாஜக ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அதே நேரம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி  24 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  இதன் மூலம் மீண்டும் முதல்வர்  அரியணையில் ஏறுகிறார் சந்திரபாபு நாயுடு. ஜூன் 9 தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார்.


இந்நிலையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்குதேசம் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  தனது நிலைப்பாட்டை செய்தியாளர் சந்திப்பின்போது சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்த வாய்ப்புள்ளது.