×


நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

 

 பிகார் மாநிலம் பாட்னாவில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மாணவர்கள் சிலர் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் மே 5ம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைத் தொடர்ந்து, அத்தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட 38 மனுக்கள் மீதான விசாரணையை இன்று தொடங்குகிறதுஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு. தேர்வு நடப்பதற்கு ஒருநாள் முன்பு பாட்னாவில் வினாத்தாள் கசிந்ததாக போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். குஜராத், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக மாணவர்கள், அரசியல் கட்சியினர் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.