×


கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

 

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது பாஜகவினரின்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

POCSO சட்டத்தின் பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 A ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வந்த தாய், நேற்று புகார் அளித்த நிலையில்  நள்ளிரவுக்கு மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  கடந்த மாதம் பிப்ரவரி 2, 2024 அன்று தாயும் மகளும் மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சரின் உதவியை நாடச் சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.