×

காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் என்ன நோயெல்லாம் வரும் தெரியுமா ?

 

பொதுவாக  நகர்ப்புற பகுதி மக்கள் நேரமில்லை என்று கூறியும் ,உடல் எடையை குறைக்கிறேன் என்றும் காலை உணவை தவிர்த்து புது புது நோய்களை வரவைத்து கொள்கின்றனர் .இதனால் என்ன பாதிப்புகள் வரும் என்று பாக்கலாம் .
1.காலை உணவை தவிர்த்து ஆபீஸ் வேளையில் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியாது ,மூளையும் சுறுசுறுப்புடனும் இருக்க காலை உணவு அவசியம் ,மூளையில் உள்ள டோபமைன் போன்றவை சுரக்க காலை உணவு அவசியம்


2.காலை உணவு மிக முக்கியமாக கருதப்படுவதற்கு காரணம் இருக்கிறது. காலை உணவை தவிர்ப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. இது மூளையில் பெரிய பாதிப்பை உண்டாக்குகின்றன.
3.இதனை சமன் செய்ய மெல்லோட்டம் அல்லது நடைபயிற்சி தேவைப்படுகிறது. இதனால் மூளை மற்ற உடல் உறுப்புகளை விட அதிக சக்தியை பயன்படுத்தும்.
4.எனவே காலையில் ஒரு அரைமணிநேரம் இவற்றை மேற்கொள்வதால் மூளை சுறுசுறுப்படைகிறது. 5.உங்களுடைய மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டிய வேண்டியது அவசியம் அதற்கு காலை உணவும் அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்  
:  
 6.நமது உடல் எழுபது சதவீதம் நீரால் ஆனவை. எனவே மூளையின் செயல்பாடு உட்பட ஒவ்வொரு உடல் செயல்பாடுகளுக்கும்காலை உணவும்  நீரும்  இன்றியமையாததாகும்.
7.தண்ணீரின்றி, காலை உணவின்றி 2 மணிநேரம் நீங்கள் கடுமையாக உடற்பயிற்சியை மேற்க் கொள்வதானால் உங்கள் அறிவாற்றல் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்