×

அரிசி மாவில் சுடப்படும்  தோசைக்குள் அடங்கியிருக்கும் ஆபத்துக்கள்

 

பொதுவாக தோசை எப்படி நம் உடலை பாதிக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.நாம் ஆசையாக சாப்பிடும் தோசையில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
2.அதே சமயம் எண்ணெய் மிதக்க தோசை நம் உடலின் கொலஸ்ட்ராலை  அதிகப்படுத்தும்.


3.முக்கியமாக இது போன்ற ஆயில் சேர்க்கப்பட்டு முறுவலாக சுடப்படும் தோசைகளை இதயநோயாளிகள் சாப்பிடக்கூடாது.
4.ஒரு மசால் தோசையில் 387 கலோரி உள்ளதால் இது ஹார்ட் பேஷண்டுக்கு அதிக ஆபத்தை உண்டாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்
5.அதே போல ஒரு சாதா தோசையில் 133 கலோரிகள் உள்ளது.
6.இட்லி, தோசை, பொங்கல் போன்றவை நம் பாரம்பரிய உணவுகள். இவற்றை சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரியாமல் சாப்பிடுகிறோம்.
7.ருசியாக இருந்தால் சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் அரிசி மாவில் தான் தோசை சுடப்படுகிறது, இதனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் சிக்கல் தான்!
8.தோசையை எந்தளவுக்கு விரும்புகிறோமா அந்த அளவுக்கு தொட்டு சாப்பிடும் சட்னியையும் விரும்புகிறோம்.சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சட்னி சாப்பிட்டால் அதிக ஆபத்தை உண்டாக்கும் ,தக்காளி சட்னி கிட்னி பாதிப்புள்ளவர்கள் தவிர்க்க வேண்டும் .