பப்பாளியை எப்படி யூஸ் பண்ணா முகம் பளிச்சுனு மாறும் தெரியுமா ?
பொதுவாக பப்பாளி பழத்தில் முக மாஸ்க் செய்வது என்பது மிக சுலபம் மற்றும் ஆரோக்கியமானதும் கூட.பப்பாளி மூலம் எப்படி முக பொலிவை உண்டாக்கலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம் .
1.முதலில் பப்பாளி பழத்தை தோல் சீவி மசித்து கொண்டு ,இதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி கொள்வோம்
2. ,இதை நேரடியாக முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்து விட்டு இந்த முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும் ,
3.மேலும் இந்த பப்பாளியுடன் நெல்லிக்காய் சேர்த்து எப்படி மாஸ்க் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்
4.நெல்லிக்காயுடன் பப்பாளி சேர்த்து மாஸ்க் போடும் போது, சருமத் துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சரும கருமையைப் போக்கி முகம் புது பொலிவுடன் இருக்கும் .
5.இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு முதலில் ஒரு பௌலில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் சாறு மற்றும் 2 ஸ்பூன் பப்பாளி கூழ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6.பின் அதை 20 நிமிடத்திற்கு குறையாமல் முகத்தில் தடவி ஊற வைக்க வேண்டும்.
7.அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவி பார்த்தால் முகம் பளபளப்பாக இருக்கும் .