×

சாமந்தி பூவுடன் பனை வெல்லம் கலந்து சாப்பிட எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 

பொதுவாக சாமந்திப் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் .சாமந்தி பூவில் கொஞ்சம் எடுத்து தண்ணீரில் ஊறவையுங்கள். அடிக்கடி தண்ணீரை மாற்றி , வடித்து, பூக்களை மட்டும் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை, சீயக்காயுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க . தலை அரிப்பு, பொடுகு, முடி கொட்டுவது போன்ற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.இது போல சாமந்தி பூவின் பல்வேறு ஆரோக்கிய நன்மை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு உடலில் உஷ்ணம் உண்டாகும் அவர்களுக்கு சாமந்திப் பூ முறையற்ற உடல் உஷ்ணத்தைப் போக்கி பலத்தைத் தருகிறது.

2.சிலருக்கு தீராத மலசிக்கல் இருக்கும் அவர்கள் சாமந்திப் பூக்கள்  எடுத்து வெந்நீரில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து வடிகட்டி ,தினமும் 2 டீஸ்பூன் குடித்துவர, மலச்சிக்கல் குணமாகும்.

3.மேலும் சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் தீராத மலச்சிக்கல் தீரும்.

4. உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.

5.சிலர்   உடல் எடை கூடாமல் மெலிந்தே இருப்பார்கள். எப்போதும் சோர்வாக தோன்றுவார்கள்.

6.இவர்கள் சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். .

7.சிலர் அல்சரால் பாதித்திருப்பர் .இப்படி பாதிக்கப்பட்டவர்கள் 2 துளி உள்ளுக்கு சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும்.

8. ஒரு சில வகை கேன்சர் நோய்க்கும் இந்த சாமந்தி பூ  மருந்தாக பயன்படுகிறது.

9.சிலருக்கு காதடைப்பு இருக்கும் இப்படி இருந்தால், காதில் ஒரு துளி விட்டுக்கொண்டால் போதும். உடனடியாக சரியாகிவிடும்.