உடல் எடையை குறைக்க காலையில் இந்த உணவை உடனே சாப்பிடுங்க
பொதுவாக உடல் எடையை குறைக்க பலர் வெவ்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் எந்த உணவை சாப்பிட்டால் நல்லது என்று பார்க்கலாம்.
1.இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உணவு பழக்கங்களும் பின்பற்றி வருகின்றன.
2.மேலும் உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றன.
3.ஆனாலும் காலையில் தினமும் திணை இட்லி சாப்பிடும் போது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது.
4.இதனை நாம் காலையில் உட்கொள்ளும்போது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை இது அள்ளிக் கொடுக்கிறது. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
5.திணை இட்லி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் பார்க்கலாம் வாங்க.
6.முதலில் திணையை எடுத்து நன்றாக சுத்தம் செய்து பாத்திரத்தில் ஒரு கப் மோருடன் சேர்த்த நன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து அதில் தேவையான அளவு கருப்பு மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
7.பிறகு சிறிது ஈனோவை சேர்த்து நன்றாக பீட் செய்து இட்லி தட்டுகளில் தினை இட்லி மாவை நிரப்பி பத்திலிருந்து 12 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
8.சத்தான திணை இட்லி தயாராகி விட்டது. எனவே சத்தான திணை இட்லியை தினமும் காலை உணவாக எடுத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.