×

கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கடலையை தொடவே கூடாது

 

வேர்க்கடலை அதிகமாக சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது.

வேர்க்கடலையில் பல்வேறு சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை அதிகமாக சாப்பிடும்போது அது நம் உடலுக்கு தீங்கையும் விளைவிக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா. வாங்க பார்க்கலாம்.

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் வேர்கடலை அதிகமாக சாப்பிடக்கூடாது. அது அவர்களின் உடல் நலத்திற்கு தீங்கானது. மேலும் கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் வேர்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் வேர்க்கடலை சாப்பிட்டால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு அஜீரணம் ஏற்படுவது மட்டுமில்லாமல் கல்லீரலுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடியது.

இது மட்டும் இல்லாமல் தோல் அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனையும் சிலருக்கு வரக்கூடும். இது உடல் கொழுப்பை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்க கூடும்.

வேர்க்கடலையில் ஆரோக்கியமான பயன்கள் இருந்தாலும் அது சிலரின் உடல் நிலைக்கு தீங்கையே விளைவிக்கிறது. எனவே அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.