×

பெண்கள் ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்

 

பொதுவாக .கம்ப்யூட்டர் முன்பு வேலை பார்ப்போர் இடுப்பு வலி உண்டாகும் .அதனால் அவர்கள்  அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும் .மேலும் கால்சியம் குறைபாடும் ஒரு காரணம் .இந்த கால்சியம் எதன் மூலம் நாம் பெறலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்

1.உடம்பில் வைட்டமின் டி குறைபாட்டை போக்க தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் இருங்கள் .அப்போது உங்கள் உடலில் வைட்டமின் டி உற்பத்தியாகும் .

2.நாம் உண்ணும் உணவில் சல்மான் மீனை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் வைட்டமின் டி, பாஸ்பரஸ், கால்சியம், செலினியம், போன்ற சத்துக்கள் அதிக அளவில் உண்டாகி உங்கள் எலும்புகள் வலுபெற்று விடும்  

3. வெளியில் ஆரோக்கியமாக சுற்றித்திரியும் நாட்டுக்கோழியில் இருந்து கிடைக்கும் முட்டைகளில் கொழுப்பு வைட்டமின்   சத்துக்கள் நிறைந்துள்ளது.இவற்றை அடிக்கடி சாப்பிடுவோருக்கு இந்த இடுப்பு உடல் வலி பிரச்சினை இருக்காது

4.பாலில் ஏராளமான கால்சியம் சத்து நிறைந்துள்ளது என்று அனைவரும் அறிந்தது மேலும் எருமை மாட்டு பால், நாட்டு மாட்டு பால் போன்ற மிருகங்களில் இருந்து கிடைக்கும் பால் அதிக அடர்த்தி மற்றும் கால்சியம் நிறைந்ததாக உள்ளது.அதனால் இந்த பாலை குடிப்போருக்கும் இந்த பிரச்சினை விரைவில் நீங்கும்

5.பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு அதிக அளவில் சோயா உணவை எடுத்துக்கொண்டால் எலும்புகளை பலம் பெற செய்து ,இடுப்பு வலி வராமல் தடுக்கிறது