குழந்தைகள் ஆரோக்கியத்துக்கு கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு சில உணவுகள் கொடுப்பதை தவிர்த்தால் நல்லது.
1.கோடை காலம் தொடங்கினாலே பெரும்பாலானோர் ஜூஸ் ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி தருவது வழக்கம். ஆனால் அதில் சில பக்க விளைவுகளும் வர வாய்ப்புள்ளது.
2.குறிப்பாக சிப்ஸ் குகீஸ் போன்ற உணவுகளை சாப்பிட கொடுக்கும் போது அது செரிமான பிரச்சனை பாதிப்பது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது.
3.கோடை காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பதை தவிர்க்கலாம்.
4.மேலும் ஐஸ் மற்றும் ஜூஸ் குடிப்பது நன்றாக இருந்தாலும் அதில் இருக்கும் சர்க்கரை அளவு உடலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.
5.இது நீரிழிவு நோய் வரவும் காரணமாக இருக்கும்.
6.குழந்தைகளுக்கு பெரும்பாலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களை கொடுத்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருப்பது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.
7.மேலும் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளும்.