×

முகத்தில் பரு வராமலிருக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க

 

பொதுவாக  ஒரு பரு வந்தாலும் அதை கிள்ளி விட்டால் அது மேலும் மோசமாகி அதிக பருக்கள் தோன்றும்
இந்த பருவை எப்படி இயற்கை முறையில் குணமாக்கலாம் என்று இப்பதிவில் காணலாம் .
1. பரு வந்தால் அதை கிள்ள கூடாது .
2.சிலருக்கு மாத விடாய் காலத்தில் பரு வந்து ,அது முடிந்ததும் மறைந்து விடும் .


3.ஆனால் சிலருக்கு அந்த தழும்புகள் முகத்தில் தோன்ற காரணம் அதை கிள்ளி விடுவதுதான் .

4.ஒருவருக்கு அடிக்கடி நெற்றியில் பரு வந்து போகிறது என்றால் அவருக்கு ஜீரண சக்தி சீரில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
5.மேலும் உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் சரியாக வெளியேற்ற படாததாலும், நெற்றியில் முகப்பரு அடிக்கடி வரும் வாய்ப்புள்ளது .
6.பருக்கள் வராமல் தடுக்க நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு பண்டங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.
7.முகத்தில் பருக்கள் வராமல் பாதுகாக்க நிறைய தண்ணீரை குடிப்பது அவசியம். குறிப்பாக நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் பழங்களை உட்கொள்ளலாம்.
8.அடிக்கடி  ஆரஞ்சு பழம், மாதுளை பழம், சாத்துக்குடி, போன்ற பழங்களை சாப்பிடுவோருக்கு பருக்கள் வராது .