×

ஓவரா காபி குடிப்போரை ஓரம் கட்டும்  நோய்கள்.

 

பொதுவாக  காபி குடிக்கும் பழக்கம் அளவோடு இருந்தால் உடலுக்கு சில நன்மைகள் உண்டு .காபி குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மை தீமை பற்றி நாம் காணலாம்
1.ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு காபி குடிப்பதால் நமக்கு மூளையில் ஞாபக சக்தி அதிகரிக்கும் ,இதய பிரச்சினைகள் வராது ,மேலும் பார்க்கின்சன்ஸ் நோய் வராது ,
2.ஆனால் அந்த காப்பியே பலர் ஒரு நாளைக்கு பத்து பதினைந்து என்று இரவு தூங்குவதற்கு முன்பு வரை குடிக்கின்றனர் .இவர்க்ளுக்கு நிறைய பாதிப்பு உண்டாகும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் 3.அதாவது இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் அதிக காப்பியால் ஏற்படும். கர்ப்பிணி 4.பெண்கள் காபியினை தவிர்த்து விடுங்கள் என்றே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகின்றது.மேலும் ஓவரா காப்பி குடிப்பதால் என்ன பாதிப்புகள் வரும் என்று பார்க்கலாம்


5.பலர் காபிக்கு அடிமையாகி ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை காப்பி ,மற்றும் தேநீர் அருந்துகிறார்கள்.
6.ஆனால்  மாலையில் கூழ் போல ஒரு சொம்பு நிறைய காஃபி குடிப்பவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
7.மாலையில் கட்டி பால் சேர்த்து ,அதிகமாக டிகிரி காஃபி அருந்தினால் நீர்ச்சத்து குறையும்.என்று டாக்ட்டர்கள் அறிவுறுத்துகின்றனர்  
8.காஃபியில் உள்ள அதிக அளவு உள்ள காஃபின் மூளையை கடுமையாக பாதித்து ,மூளை கோளாறுக்கு எதிர்காலத்தில் வழி செய்யும் .