×

ஓவரா பாகற்காய் சாப்பிட்டால் நம்மை ஓரம் கட்டும் நோய்கள்

 

பொதுவாக   அளவுக்கதிகமாக பாகற்காயை உண்டால் என்னென்ன பக்க விளைவுகள் வரும் என்று இந்த பதிவின் மூலம் பாக்கலாம்
1.சிலர் சுகரை குறைக்க அளவுக்கதிகமாக பாகற்காய் ஜூஸ் குடிப்பதுண்டு .
2.இப்படி பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் சிலருக்கு கல்லீரல் பாதிப்பு உண்டாகலாம் .
3..எனவே, சுகர் வராமல் தடுக்கிறேன் என்று தினமும் பாகற்காய் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.


4.சில பெண்கள் கர்ப்ப காலத்தில் வரும் சுகரை குறைக்க பாகற்காய் சாப்பிடுவர் .
5.இப்படி கர்ப்ப காலத்தில் பாகற்காய் அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ,
6. மேலும்  கர்ப்பிணிகள் பாகற்காய் ஜூஸ் கூட  குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
7.உடலில் இரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காயை  தொட கூடாது. இது உங்கள் சர்க்கரை அளவை மேலும் மேலும் குறைத்து ஆபத்தில் தள்ளலாம் .  
8.இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பாகற்காய் அதிக அளவில் சாப்பிடுவதால் இதயத்தில் ரத்த ஓட்டம் ஒரு புறமே செல்லும்.   
9.மேலும் ஓவர் பாகற்காய் மூலம் சீறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது .