×

பாப் கார்ன் யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா ?

 

பொதுவாக  நாற்பது வயது வரை நாம் சொல்வதை உடல் கேட்கும் .நாற்பதுக்கு பிறகு உடல் சொல்வதை நாம் கேட்க வேண்டும் .அதாவது நாற்பதுக்கு பிறகு எந்த  உணவை சாப்பிட வேண்டும் என்று இப்பதிவில் நாம் காணலாம் ,
1.அந்த வகையில் அதிக கொழுப்பு மற்றும் சோடியம் உணவுகளை தவிர்த்து விட்டு நார் சத்துள்ள உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும் ,
2.க்ரீன் டீ, ஜூஸ், காய்கறி சாறு, தேங்காய் தண்ணீர், எலுமிச்சைப்பழம் போன்றவற்றுடன் தண்ணீரும் ஒரு நாளைக்கு 2முதல் 3 லிட்டர் வரை குடித்து வரலாம்
3..காஃபின் உள்ள உணவுகளை தவிர்த்தல் நல்லது .இவை அதிகமானால் அமிலத்தன்மை உடலில் அதிகரிக்கும் .


4.செயற்கை புரதங்களில் உள்ள கொழுப்பு மற்றும் செயற்கையான இனிப்புகளை தவிர்க்கலாம்  
5.ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் தவிர்க்கலாம்  . இது கல்லீரலுக்கு நச்சுத் தன்மையையும், உங்களின் இதயத்திற்கு தீங்கையும் விளைவிக்க கூடியது.
6.சர்க்கரை சேர்த்த குளிர் பானங்களை தவிர்த்தல் நலம் . 40 வயதைக் கடந்த பிறகும் இந்த பானங்கள் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது.
7., சினிமா தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் பாப்கார்னில் ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.அதனால் இதை தவிர்க்கலாம்