வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் இந்த நோய் குணமாகும்
பொதுவாக மேஜர் மவுத் அல்சர் குணமாக சில வாரங்கள் தேவைப்படும் .இது உண்டாக பல காரணங்கள் உள்ளது .இந்த மௌத் அல்சர் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1. போதிய அளவு தூங்காமல் இருந்தால் வாய்ப்புண் தோன்றும் என்று கண்டறியப்பட்டுள்ளது .
2.மேலும் எமோஷனல் ஸ்ட்ரெஸ் உடலில் இருந்தால் இந்த புண்கள் தோன்றும் .
3.இன்னும் சிலருக்கு
வைட்டமின் சத்துக் குறைபாடு இருந்தால் இந்த வாய்ப்புண் தோன்ற வாய்ப்புள்ளது
4.மேலும் சிலருக்கு டீனேஜ் பருவத்தில், உடல் மாற்றத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக தோன்றலாம் .
5.அதிக காரமான மசாலாக்கள் நிறைந்த உணவு வகைகளை உண்பதாலும் இந்த வாய்ப்புண்கள் தோன்றலாம் .
6.சாதாரண வாய்ப்புண்கள் தானாகவே 8 முதல் 10 நாட்களுக்குள் சரியாகிவிடும்.
7.வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வருதல்,
8.வெதுவெதுப்பான நீரில் சமையல் சோடா (பேக்கிங் சோடா) சேர்த்து வாய் கொப்பளிப்பதன் மூலம் வலி குறையும் புண்கள் விரைவில் குணமடையும்.