×

ஆகாய தாமரை இலை சாற்றில் சீரகத்தை கலந்து  சாப்பிட்டால் எந்த நோய் தீரும் தெரியுமா ?

 

பொதுவாக ஆகாயத்தாமரை இலைகள் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறது .இது நம் உடலில்  வழங்கும் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இது தொற்றும்  நுண்கிருமிகள், நோய் கிருமிகளை அழிக்க கூடிய ஆற்றல் மிக்கதாக விளங்குகிறது . 2.மேலும் நம் தோலில் உண்டாகும் பல நோய்களை கொல்லும் .இது தோல் நோய்க்கு சிறந்த மருந்தாகிறது.
3.மேலும் நமக்கு உண்டாகும்  காய்ச்சலை தணிக்கிறது. நம் உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. 4.வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது என்பதால் இதன் இலைகள் நம் ஆரோக்கியம் காக்கும் ,

5.ஆகாயத் தாமரை இலையை சாறு பிழிந்து 5 மில்லி அளவுக்குக் குடித்தால் பித்தம்,கரப்பான் நோய்கள் தீர்ந்து நம் ஆரோக்கியம் சிறக்கும் .
6.ஆகாய தாமரை இலை சாற்றில் சீரகத்தை 3 கிராம் அரைத்து சாப்பிட்டால் நீர் சுருக்கு,சீதபேதி, வறட்டு இருமல் போன்றவை குணமாகி நம் உடலை பாதுகாக்கும் .
7.ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம்,மூலக்கட்டி பௌத்திரம் போன்றவை குணமாகி மலசிக்கலின்றி காக்கும்  
8.இவ்ளோ நல்ல பலனை கொடுக்கும் ஆகாயத் தாமரை இலையை வினிகர் சேர்த்து வேக வைத்து சாற்றை பிழிந்து எடுத்து விட்டு சக்கையை மட்டும் அழுகிய புண்களில் வைத்து கட்டினால் அந்த புண் விரைவில் குணமாகி நம் ஆரோக்கியம் சிறக்கும்