ஊறவைத்த பாதாமில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா ?
பொதுவாக பாதாம் பருப்பானது சாப்பிடுவதற்கு ருசியாக தான் இருக்கும். இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1. இதனை அப்படியே சாப்பிட கூடாது.12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.இப்படி சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்.
2.தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பருப்பில் லிபேஸ் என்ற நொதி உள்ளது .இது நாம் சாப்பிட்ட உணவை எளிதில் செரிக்க வைத்து நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
3.12 மணி நேரம் ஊற வைத்த பாதாமால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும். நமது இரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெரோல் என்கிற பொருளை இந்த ஊறவைத்த பாதாம் அதிகரிக்கிறது.
4.பாதாம் நம் உடல் எடையை கணிசமான அளவு குறைக்க உதவும் .இந்த பாதாமில் கொழுப்பு காணப்படுவதால் இது எளிதில் வயிற்றை நிரப்பி விடும்.
5.இதனால் வயிறு நிரம்புவதால் வேறு ஒன்றும் சாப்பிட முடியாததால் உடல் எடை குறையும்.
6.தண்ணீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடுவதால் நம் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது
7.இதில் உள்ள ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
8.ஊறவைத்த பாதாமில் உள்ள பி17 வைட்டமின் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது .