×

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள்

 

பொதுவாக இன்றைய காலத்தில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் சித்த வைத்தியத்தில் உற்ற தோழனாக இருப்பது நெல்லிக்காய் தான்.பார்வை குறைபாடு வராமல் தடுக்கும் சக்தி இந்த நெல்லிக்கனிக்கு உள்ளது.

மூளைக்கு செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து உடம்பை சுறுசுறுப்பாக வைப்பதில் வல்லமை பெற்றது நெல்லிக்கனி.மேலும் இந்த நெல்லிக்காய் மூலம் நாம் பெரும் மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்

1.காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் நமக்கு ஏராளமான சத்து கிடைக்குது. ஏனென்றால் அதில் நிறைய வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.

2.உடல் ஆரோக்கியம் பெற தினமும் ஆப்பிள் சாப்பிட சொல்வாங்க. ஆனால் இந்த ஒரு நெல்லிக்கனி 3 ஆப்பிளுக்கு சமமானது.

3.ஏனென்றால் இதில் அதிக அளவு புரதம் , வைட்டமின் சி, கால்சியம் சதுக்கள் காணப்படுகிறது.

4.வயிறு பிரச்சினைக்கு தீர்வு தரும்திரிபலாசூரணம் தயாரிப்பில் நெல்லிக்கனி முக்கிய பங்கு வகிக்கிறது. 5.மற்ற கனிகளை காட்டிலும் நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி காணப்படுகிறது.

6.தினமும் 1 அல்லது 2 நெல்லிக்காய் சாப்பிடுவதால் இது இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்கிறது.

7.நெல்லிக்காய் இரத்த சோகைக்கு இது ரொம்ப நல்ல தீர்வாக இருக்கிறது.

8.தலைமுடி வளருவதில் நெல்லிக்காய் எண்ணெய் முக்கிய பங்கு தருகிறது.

9.சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமுமே ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவர பூரண குணமடையும். மேலும் இது பசி பிரச்சினைக்கு நல்ல தீர்வை தருகிறது.

10.நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் போது அது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை பேணி பாதுகாக்கிறது.