×

நெல்லிக்காயுடன் புதினா சேர்த்து குடித்தால் எந்த நோய்களை விரட்டலாம் தெரியுமா ?

 

பொதுவாக நெல்லிக்காயிலிருந்து லேகியம் முதல் மாத்திரை  வரை தயாரித்து கொடுக்கின்றனர்.இது நம் உடலில் தோன்றும் பல நோய்களுக்கு சிறந்த பலனை கொடுக்கிறது .இந்த  நெல்லிக்காயின் பலன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்  

1.நீரிழிவு நோயை விரட்டும் மருத்துவ குணம்  நெல்லிக்காயில் காணப்படுகின்றன.மேலும்  இது நம் உடலில் தோன்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.


2.இதில் உள்ள நார்ச்சத்துகள் நம்  இரத்த ஓட்டத்தில் மெதுவாக குளுக்கோஸை வெளியிடுகின்றன
3.சர்க்கரை நோய்க்கு விட்டமின் சி நல்லது ,எனவே  நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.
4.இது தவிர, இந்த நெல்லிக்காய்   குளுக்கோஸ் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் . .நெல்லிக்காயை கொண்டு பின்வருமாறு தேநீர் தயாரித்தும் குடிக்கலாம்
5.முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
6.பின்னர் அந்த கொதிக்கும் நீரில்  ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் நசுக்கிய இஞ்சியை கலக்கவும்.
7.பின்னர் அந்த கொதிக்கும் கலவையில்  புதினா இலைகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். 8.பிறகு தேநீரை வடிகட்டி ஒரு கோப்பையில் பரிமாறவும்.
9.இந்த டீயை நீங்கள் ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வந்தால் மேலே சொன்ன பல நோய்களை குணப்படுத்தலாம்