×

பெண்கள் நின்று கொண்டே சமைப்பதால் என்ன பிரச்சினை வரும் தெரியுமா ?

 

பொதுவாக இந்த அவசர யுகத்தில் ஓய்வின்றி உழைப்பதாலும் .கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் இருப்பதாலும் இந்த பிரச்சினை அதிகமாகிவிட்டது .
இடுப்பு வலி நீங்க  சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள் .

1.இடுப்பு வலி குணமாக கொண்டை கடலையை வருத்து அதனுடன் நாட்டு சர்க்கரையை கலந்து சாப்பிட்டால் குணமாகும் .மேலும் இந்த கொள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது. .
2.இடுப்பு வலி உள்ளவர்கள் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிட்டு வர இடுப்பு வலி இருந்த இடம் தெரியாது
3.பல வைத்தியம் பார்த்தும் குணமாகாத இடுப்பு வலியுள்ளவர்கள்  ஒரு கிராம் சுக்கு, ஐந்து மிளகு, ஐந்து கிராம்பு ஆகிய மூன்றையும் பயன்படுத்தி தேனீர் செய்து தினமும் இருவேளை குடித்து வர இடுப்பு வலி பறந்து போகும் .


4.வருடக்கணக்கில் இடுப்பு வலியுள்ளவர்கள் வெற்றிலையை நன்கு பிழிந்து சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலியிலிருந்து நல்ல நிவாரணம் உண்டு .
5.மேலும் முன்பு கிட்செனில் பெண்கள் உட்கார்ந்து கொண்டு சமைப்பார்கள் ஆனால் இப்போது நாள் முழுவதும் நின்று கொண்டே சமைக்கும் விதமாக கிச்சேன் இருக்கிறது .இதனாலும் இடுப்பு வலியால் அவதிப்படுவோர் எண்ணிக்கை கூடி விட்டது