×

கெட்ட கொழுப்பை குறைக்கவும்  நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவும் இப்பருப்பு

 

பொதுவாக  முந்திரி பருப்பு உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் .இந்த பருப்பின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.முந்திரி பருப்பில்  நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளதால் இதயத்திற்கு வலு சேர்க்கும் .


2.மேலும் செரிமானமின்மை பிரச்சினையால் அவதிப்படுவோர் இதை சாப்பிட்டால் சரியாகும்  3.எலும்புகளுக்கு வலு சேர்ப்பது ,புற்று நோய் ,தலை முடி ,ரத்த அழுத்தம் ,கிட்னி கற்கள் ,நரம்புகள் ,தூக்கமின்மை போன்ற அபல்வேறு நோய்களுக்கு இது பயன் தரும்  
4.முந்திரிப்பருப்பு உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை குறைக்கவும் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
5.இதய நோய் வருவதற்கான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வீக்கத்தை குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முந்திரிப் பருப்பில் உள்ளது.
6.முந்திரிப்பருப்பு இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. முந்திரிப்பருப்பில் நிறைவுற்ற கொழுப்புகள், மெக்னீசியம், பொட்டாசியம், எல்-அர்ஜினைன் போன்ற தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை வேகமாக குறைக்க உதவுகிறது.