×

இயற்கையாய் பழுத்த பழத்தை எப்படி கண்டு பிடிக்கலாம் தெரியுமா ?

 

பொதுவாக  சில வியாபாரிகள் வாழைப்பழத்தை கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்கின்றனர் .இதை வாங்கி சாப்பிடும் நமக்கு பல்வேறு உடல் நல கோளாறு உண்டாகிறது .
இயற்கையாகவே பழுத்த வாழைப்பழத்தின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் புள்ளிகளுடன் இருக்கும்.மேலும் சில குறிப்புகளை கொடுத்துள்ளோம் படித்து பயன் பெறுங்கள்

1.கார்பைடு கல்லினால் பழுத்த வாழைப்பழங்கள் லேசான சுவையுடன்தான்  இருக்கும்.


2.கார்பைடு கல் மூலம் பழுத்த வாழைப்பழங்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், .
3.. கார்பைடு மூலம் பழுத்த வாழைப்பழங்கள் அடியில் கருப்பாக இருப்பதால் விரைவில் கெட்டுவிடும்.
4.கார்பைடு கல் மூலம் பழுத்த வாழைப்பழங்கள் உடலின் செரிமான அமைப்பை பாதிக்கிறது.
5.கார்பைடு கல் மூலம்பழுத்த பழத்தை  உட்கொள்வதால் கண்களில் குமட்டல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
6.கார்பைடு கல் மூலம் பழுத்த பழத்தை  அதிகமாக உட்கொள்வதால் கட்டிகள் போன்ற நோய்களும் வரலாம்.


.