×

பீட்ரூட் சாற்றை உதடுகளில்  தடவினால் என்னாகும் தெரியுமா ?

 

பொதுவாக பெண்கள் லிப்ஸ்டிக் போட்டு கொண்டு உதட்டை சிவப்பாக்கி கொள்கின்றனர் .ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை துடைத்து விட்டால் சிலரின் உதடு கருப்பாக இருக்கும் .இதற்கு என்ன செய்யலாம் என்று நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.தினம் சிறிது எலுமிச்சை சாற்றை உங்கள் உதடுகளில் தடவி வரவும் ., சுமார் 15 நிமிடங்கள் விட்டு, அந்த லெமன் சாறை தண்ணீரில் கழுவ,கருப்பான உதடு சிவப்பாக மாறும் . .


2.அடுத்து ,உங்கள் கருப்பு உதடு மேல் சிறிது சர்க்கரையை ஆலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் கலந்து ஸ்க்ரப் செய்யவும்.
3.இது கருமையை ஏற்படுத்தும் இறந்த சரும செல்களை அகற்றி உங்கள் உதட்டை சிவப்பாகும் .
4.அடுத்து தூங்க  செல்வதற்கு முன் சிறிது பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவி வரவும் ., .
5.காலையில் உங்கள் உதட்டை கழுவி வந்தால் உதடு சிவப்பாக இருக்கும்  
6.அடுத்து ஒரு வெள்ளரிக்காயை துண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும் .
7.பின்னர் அதை , உதடுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி வந்தால் சிவப்பாக மாறியிருக்கும்