×

ஏலக்காயை கொதிக்க வச்சி குடிச்சா எந்த நோயை போட்டு மிதிக்கலாம் தெரியுமா ?

 

பொதுவாக நம் உடலுக்கு சீரகம் ,புதினா ,கிராம்பு ,ஏலக்காய் ,இஞ்சி போன்ற பொருட்கள் நன்மை செய்யும் .இந்த பொருட்களை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொண்டு வந்தால் மாத்திரை மருந்துகளே நமக்கு தேவைப்படாது அந்தளவுக்கு அவற்றில் மருத்துவ குணம் அடங்கியுள்ளது அந்த பொருட்கள் மூலம் நம் உடல் அடையும் பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1. சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடைப்பெற வைத்து, வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும் ஆற்றல் உள்ளது

2.கிராம்பு இயற்கையான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக்கத்தை துரித்தப்படுத்துகிறது மற்றும் உமிழ் நீர் சுரப்பதையும் அதிகப்பப்படுத்துகிறது.

3.கிராம்பில் காணப்படும்  ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது.

4. நமது உடலில் சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங்களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது.

5.மேலும் ஏலக்காய்  செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும்.

6.குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

7.புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.

8.புதினா  இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

9.புதினா இலை  வயிற்றில் அமிலத்தைக் குறைத்து, செரிமானத்திற்கு உதவுகிறது.

10.இஞ்சி உணவை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக்கிறது.  11.இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது