×

உங்கள் காலை உணவில் உளுந்து இருந்தால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா ?

 

பொதுவாக பலரும் ,காலை நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவை எடுத்து கொள்கின்றனர் .அதனால் எது ஆரோக்கியமான காலை உணவு .எதை எடுத்துக்கொண்டால் நோய்கள் இல்லாமல் இருக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.உங்கள் காலை உணவில் தவறாமல் பருப்புகள், தானியங்கள் மற்றும் பழவகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


2. சோயா பீன்ஸ், உளுந்து, பச்சைப்பயிறு, குதிரைவாலி,  கொள்ளு போன்ற தானியங்கள் எடுக்கலாம்
3.பாதாம்,  பிஸ்தா, முந்திரி போன்ற பருப்பு வகைகளிள்  ஒன்றை  காலை உணவில் தவறாமல் எடுத்துக் கொண்டால் நம் ஆரோக்கியம் காக்கப்படும்  
4.காலை  உணவில் சோயா பீன்ஸ் இருந்தால் இதயம் மற்றும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கும்.
5.காலை உணவில் பச்சைப்பயிறு இருந்தால் உடல் எடையை வெகு விரைவில் குறைக்க உதவும்.
6.காலை உணவில் உளுந்து இருந்தால் ஆண்மையை பெருக்கும் மற்றும் பெண்களின் இடுப்புவலி, எலும்புகள் ஆரோக்கியம் போன்றவற்றிற்கு மிகவும் நல்லது.
7.காலை உணவில் கொள்ளு இருந்தால் உடலிலுள்ள கொழுப்பை கரைக்க உதவும்.
8.காலை உணவில் பாதாம் பருப்பு   இருந்தால் நல்ல கொழுப்புகள்  நம் இதயத்திற்கு மிகவும் பயனளிக்கும் மேலும் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதால்  உடல் எடை குறையும்.