×

எடை குறைய வைக்கும் குடை மிளகாய் -எப்படி தெரியுமா ?

 

பொதுவாக குடை மிளகாய் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது .இதில் உள்ள சிலவகை பொருட்கள் நமக்கு நன்மை செய்கிறது .இதை சைனீஸ்உணவு வகைகளில் அதிகம் பயன் படுத்துகின்றனர் .மேலும் இந்த குடை மிளகாய் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்

1.குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. .

2.குடைமிளகாயில் வைட்டமின் ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் உள்ளன.

3.குடை மிளகாய் வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவை குணமாக பயன்படுகிறது.

4.கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்புண் தோன்றும். அந்நோய்களை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

5.பல்வலி, மலேரியா, மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் உள்ளது. 6.குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை, குறைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

7.குடை மிளகாய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்தும்.

8.குடை மிளகாயில் , கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

9.குடைமிளகாயில் உள்ள கேயீன் எனும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளை குறைக்கும்.