×

இடுப்புப் பகுதி மற்றும் கெண்டைக் கால் பகுதிகளில் வலி ஏற்பட்டால் எந்த நோயின் அறிகுறி தெரியுமா ?

 

பொதுவாக  கொலஸ்ட்ரால் நம்முடலில் அளவுக்கதிகமாக சேர்ந்தால் இதய நோய்கள் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கும் .இந்த கொலஸ்ட்ரால் மூலம் என்ன பாதிப்பு உண்டாகும் என்று காணலாம்
1. கொலஸ்ட்ரால் அதிகமாக காரணம் எதுவென்றால் ,அதிகமாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது ,உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து நாள் முழுவதும் வேலை பார்ப்பது காரணம்
2.மற்றும் மரபு வழியாகவும் இந்த கொலஸ்ட்ரால் நம் உடலில் கூடும் .
3.எனவே இதை ஆரம்பத்திலே சில அறிகுறிகளை கொண்டு கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும் .


4.இதன் முக்கிய அறிகுறிகள் கால்கள், தொடைகள், பின்னங்கால் மற்றும் பாதங்களில் தசைப்பிடிப்பு இருக்கலாம் என்று பல மருத்துவ குறிப்புகள் கூறுகிறது
5.உங்களுக்கு அதிக கொலஸ்டிரால் இருக்கும் போது, PAD நோய் எற்படும் அபாயம் உள்ளது.
6.இதனால், உங்களுடைய இடுப்புப் பகுதி, தொடை மற்றும் கெண்டைக் கால் பகுதிகளில் வலி ஏற்படும். 7.குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும் போது, நீண்ட தூரம் நடக்கும் போது, படிகள் ஏறும் போது, மேற்கூறிய பகுதிகளில் வலி மற்றும் தசைபிடிப்பு ஏற்படும்.
8.இந்த அறிகுறிகளை அலட்சிய படுத்தாமல் தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்