நம் ஆரோக்கியத்துக்கு செம்பு பாத்திரத்தில் எப்படி தண்ணீர் குடிக்கணும் தெரியுமா ?
பொதுவாக நாம் இப்போதெல்லாம் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறோம் இது உடலுக்கு கேடு உண்டாக்கும் .ஆனால் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் நன்மை பயக்கும்
1.பொதுவாகவே அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பது வழக்கம்.
2..அப்படி குடிக்கும்போது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.
3.இது நீரில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சுத்தமான நீராக மாற்றுகிறது.
4.ஆனால் அதனை முறையாக பயன்படுத்தாமல் குடிக்கும் போது அது உடலுக்கு ஆபத்தையும் விளைவிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
5.செம்பு பாத்திரத்தை நீங்கள் கழுவாமல் பயன்படுத்தும் போது அதில் பச்சை நிறத்தில் படர்ந்து வரும் அது ரசாயனமாக மாறுகிறது.
6.அந்த நீரை குடிக்கும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படக்கூடும்.
7.செம்பு பாத்திரத்தில் தரையில் வைக்காமல் ஒரு மரத்தாலான மேசையின் மீது வைக்க வேண்டும்.
8.காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கும் போது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
9.ஆனால் சாப்பிட்ட உடன் குடித்தால் செரிமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
10.செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் குடித்தால் ஆரோக்கியம் தான் என்றாலும் அதனை சரியாக பராமரிக்காமல் குடித்தால் அது உடலுக்கு தீங்கை விளைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.