×

கருப்பு மிளகை தேனில் குழைத்து சாப்பிட்டால்  எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 

பொதுவாக  இருமலால் இரவில் தூங்க முடியாமல் பலர் அவதி படுவதுண்டு .இன்னும் சிலருக்கு  சில வார்த்தை கூட பேச முடியாமல் இருமல் வந்து கொண்டேயிருக்கும் .இதனால் சிலர் மூச்சு விடவே சிரமப்படுவதுண்டு .இதை எப்படி குணமாக்கலாம் என நாம் காணலாம்
1.இந்த இருமல் காசநோய் ,அல்லது நிமோனியா போன்ற நோய்களால் கூட உண்டாக வாய்ப்புண்டு .
2.இதனால் எரிச்சலுணர்வு ,சோர்வு போன்றவை ஏற்படும் .

3.வறட்டு இருமல் நிற்க ,1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் ஓமத்தை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள் .,
4. பின்னர் அதில் தேன் கலந்து தினமும் மூன்று முறை குடித்து வாருங்கள் .இப்படி செய்தால் , வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்
5.ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு நாள் முழுவதும் மென்று கொண்டேயிருந்தால் இந்த வறட்டு இருமல் நிற்க வாய்ப்புண்டு
6.மேலும் லெமனுடன் தேன் கலந்து குடிப்பது இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்
7.கருப்பு மிளகை தேனில் குழைத்து சாப்பிட்டாலும் இருமல் நிற்கும்