×

அரசமரத்துப் பாலை  பாதங்களில் தேய்த்தால் எந்த நோய் பயந்து ஓடும் தெரியுமா ?

 

பொதுவாக பாதத்தில் ஒரு பிரச்சினையும் வராமல் பாதுகாக்க வேண்டும் .ஆனால் நாம் பாதத்தில் உண்டாகும் பித்த வெடிப்பை குணமாக்கும் வழிகள் பற்றி இப்பதிவில் காணலாம்

1.சிலருக்கு கால்களில் பித்த வெடிப்பு உண்டாகும் .இந்த காலில் ஏற்படும் பித்தவெடிப்பால் நடக்கும்போது பெரும் சிரமமாக இருக்கும்.
2.இந்த பித்த வெடிப்பிலிருந்து  விடுபட எளிய மருந்து ஒன்று உண்டென்றால் அது அரசமரத்து பால் தான் .
3.இந்த அரசமரத்துப் பாலை ஒரு கிண்ணத்தில் பிடித்து ,பித்த வெடிப்பு மீது தடவி வந்தால் பித்த வெடிப்பு சுத்தமாக காணாமல் போகும்
4.அதேபோல் இந்த நோய்க்கு கண்டங்கத்திரி இலைச்சாறை ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சவும்
5. இந்த காய்ச்சிய கலவையை பாதங்களில் பூசி வந்தால் பித்த வெடிப்பு உடனடியாக குணமாகும்.


6..அடுத்து மருதாணி இலைகளை நன்றாக அரைத்து கொள்ளவும் .பின்னர் பித்த வெடிப்பு உள்ள இடங்களில் அந்த மருதாணியை தேய்த்து காய வைக்க வேண்டும்.
7.தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பித்த வெடிப்பு சுத்தமாக குணமாகும்.
8.அடுத்து பப்பாளி பழத்தை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்
9.பின்னர் அரைத்த பப்பாளியை வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
10.அதே போல காய்ச்சிய வேப்ப எண்ணெய்யை சேற்றுப்புண் மீது தடவி வந்தால் அது எளிதில் குணமாகி பாதம் பளிச்சென்று இருக்கும் .