முடக்கத்தான் கீரையை வதக்கி சாப்பிட எந்த வியாதியை விரட்டலாம் தெரியுமா ?
பொதுவாக வாய்வு தொல்லை என்பது சிலருக்கு உடலில் பல இடங்களில் ஊசி குத்துவது போல் சுருக் சுருக் கென்று இருக்கும் .இப்படி இருக்கும் கோளாறை சிலர் நெஞ்சு வலி வந்துவிட்டது என்று கூட தவறாக எடுத்து கொள்வர் .அதனால் இந்த வாய்வு தொல்லையை வீட்டிலேயே சரி செய்யலாம் என்று காணலாம் .
1.உடனடியாக சீரகம் சோம்பு இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால் சரியாகும் 2.மேலும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டாலும் இந்த வாய்வு தொல்லை சரியாகும்
3. வாய்வு தொல்லையால் அடிக்கடி அவஸ்த்தை படுவோர் சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து கொள்ளவும்
4.காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சக்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்வு தொல்லை இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் .
5.வாய்வு தொல்லை பாடாய் படுத்தும்போது துளசி சாறு மற்றும் இஞ்சி சாறை தலா மூன்று ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்
6.ஒரு நாளைக்கு இரு வேலை என மூன்று நாட்களுக்கு குடித்து வர அடிக்கடி வரும் ஏப்பம் முதல் நெஞ்செரிச்சல் வரை காணாமல் போகும்
7. வாய்வு தொல்லையால் உடலில் பல இடஙக்ளில் வலியிருப்போர் சுக்குமல்லி காபியை குடிக்கலாம் , பூண்டு குழம்பு வைத்து சாப்பிடலாம் ,
8.முடக்கத்தான் கீரையை வதக்கி சாப்பிடுவது போன்ற சித்த வைத்தியமுறையை கையாண்டால் அதை நிரந்தரமாக விரட்டியடிக்கலாம்