ஜப்பான் காரனை நூறு வயசு வாழவைக்குதாம் இந்த தேனீர்
பொதுவாக மற்ற தேநீரை விட க்ரீன் டீ நம் உடலுக்கு நன்மை சேர்க்கும் ஆற்றல் கொண்டது ஆகும் .இந்த கிறீன் டீ யை எப்படி குடிக்க வேண்டும் ,எப்போது குடிக்க வேண்டும் ,யார் யாரெல்லாம் குடிக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.ஜப்பானியர்களுக்கு க்ரீன் டீ பிடிக்கும் .உலகிலேயே ஜப்பானியர்கள் தான் கிரீன் டீயை எப்போதும் குடிக்கிறார்கள்.
2.அதனால்தான் ஜப்பானியர்கள் இளமையுடனும், ஆரோக்கியமாக வாழ்கின்றனர்
3.மேலும் ஜப்பானியர்கள் நோய் நொடி இல்லாமல் க்ரீன் டீ மூலம் வாழ்கிறார்கள்.
4.மேலும் ஜப்பானியர்கள் க்ரீன் டீ மூலம் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
5.ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் உடல் எடை கணிகமாக குறைகிறது
6.க்ரீன் டீ ஆரோக்கியமானதுதான். ஆனால், அவற்றை சரியான முறையில் பருகாவிட்டால் உடலுக்கு கேடு விளைவித்துவிடும்
7.க்ரீன் டீ இலைகளை வெந்நீரில் 2 நிமிடத்திற்கு மேல் கொதிக்க வைக்கக்கூடாது.
8.க்ரீன் டீயில் சிலர் சர்க்கரை கலந்து குடிப்பதுண்டு .ஆனால் சர்க்கரை மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கக்கூடாது.
9.ஆனால் க்ரீன் டீயில் எலுமிச்சை சாறு மற்றும் சிறித தேன் கலந்து குடிக்கலாம்.
10.க்ரீன் டீயில் விட்டமின் பி, ஃபோலேட் சத்து, மக்னீசியம் உள்ளது.
11.க்ரீன் டீ இலையை பயன்படுத்தும்போது, தூள் செய்யாமல் இலைகளாக பயன்படுத்தினால் நல்லது.
12.க்ரீன் டீயை ஒரு நாளைக்கு 3 கப் மேல் குடிக்கக்கூடாது.
13.அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் க்ரீன் டீயை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .