முடி உதிர்வுக்கு உதவும் வீட்டு வைத்திய முறை
பொதுவாக முடி உதிர்வுக்கு அவர்கள் பல்வேறு வைத்திய முறைகள் மற்றும் சிகிச்சை செய்து பணத்தை செலவு செய்கின்றனர் .ஆனால் இந்த தலை முடி உதிர்வுக்கு சில வீட்டு வைத்தியம் உள்ளது .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் ஒரு பௌலில் கெட்டியான தயிரை எடுத்துக் கொண்டு வரவும் .அந்த தயிரின் அளவு அரை லிட்டர் இருக்கலாம்
2.அடுத்து அந்த தயிருடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளவும் .பின்னர் இந்த கலவையை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
3.அதன் பின் சிறிது சிறிதாக அந்த தயிர் மற்றும் ஆலிவ் ஆயில் கலவையில் அதிமதுரப் பொடியை அதில் சேர்த்து கொண்டு நன்றாக கலக்கவும்
4.இந்த கலவையை கட்டிகள் இல்லாமல் நன்கு பேஸ்ட் போல ஒரு ப்ரஷ் மூலம் கலந்து கொள்ளுங்கள்.
5.அதன் பின்னர் இந்த கலவையை நம் தலை முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனி வரை அப்ளை செய்து கொண்டே வாருங்கள்
6.நன்றாக கலந்து தலை முடியில் பூசிய பின்னர் 30 நிமிடங்கள் வரை முடியை உலர விடுங்கள்.
7.அதன் பின் தலையை அலசிக் கொள்ளவும் .இது போல அடிக்கடி செய்து வந்தால் தலை முடி கொட்டாது