பசலை கீரை அடிக்கடி சாப்பிட்டால் நம் உடலில் நேரும் மாற்றம்
பொதுவாக இரும்பு சத்துள்ள மலிவான விலையில் கிடைக்கும் ஏராளமான உணவு பொருட்கள் உள்ளது .அதில் சில பொருட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
1.தினையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டு வந்தால் நல்லது .
2.மேலும் பேரீச்சம்பழம் மற்றும் எள் கூட
நமது உடலில் ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது .
3.இரும்பு சத்துள்ள ,மலிவான பசலைக்கீரை 250 கிராம் தக்காளி 100 கிராம் எடுத்துக்கொள்ளவும் .
4.பிறகு 4 டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சீரகத்தூள் கலந்து ஐந்து நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை இந்த கீரையை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்
5.இதை தினமும் இரு முறை குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து நமது ஆரோக்கியம் மேம்படும் .
6.அடுத்து விலை மலிவான பீட்ரூட், மாதுளை, பசலைக்கீரை, கேரட் சம அளவு எடுத்துக்கொள்ளவும் . பிறகு அதை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும் .
7.அதை குடிக்கும் முன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்துகொள்ளவும் .இதை தினமும் ஒரு வேளை குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு கணிசமான அளவு உயர்ந்து விடும்