×

பல நோய்களிலிருந்து காக்கும் இந்த தேநீர் தயாரிக்கும் முறை

 

பொதுவாக  இஞ்சி இம்மியூனிட்டி பவரை கொடுக்கும் .ஏலக்காய் பல கிருமிகளை கொல்லும் .மிளகு, லவங்கப்பட்டையும் ,கிராம்பும்  பல நுண் கிருமிகளை அண்ட விடாமல் செய்யும் . .இந்த பொருளை கொண்டு ஒரு மூலிகை தேனீர் தயாரிக்கலாம்
1. இஞ்சி,ஏலக்காய் ,லவங்கப்பட்டை ,கிராம்பு ,மிளகு இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் .


2.அதன் பின்னர் அடுப்பில்  200ML தண்ணீரை சூடு செய்ய வேண்டும். அதில் இந்த 5மூலிகைப் பொருட்களையும் போட்டு நன்றாக கொதிக்க விடவும்
3. மேலும் இதனுடன் 10 துளசி இலையை போட்டு கொதிக்க விடவும்
4. அடுத்து தண்ணீர் கொதித்ததும் தேவைப்பட்டால் உங்கள் விருப்பத்தின்படி டீ தூள் சேர்த்துக் கொள்ளலாம் 5.பிறகு தண்ணீர் கொதித்து வரும் பொழுது சுவைக்காக வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக்கொள்ளலாம்.
6.பின் வடிகட்டி காலை மாலை குடிக்கலாம் .
7. வழக்கமாக எடுக்கும் டீக்கு பதிலாக இந்த மூலிகை டீயை எடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்