×

உணவை இப்படி சாப்பிட்டால் நாம் ஆரோக்கியமாய் வாழலாம்

 

பொதுவாக பசியில்லாதபோது நாம் சாப்பிட்டால் அது நமக்கு பல்வேறு வயிறு பிரச்சினைகளை உண்டாக்கும் .இதுபோல ஆரோக்கிய வாழ்வுக்கு எப்படி உணவை உண்ண வேண்டும் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1. பசி எடுத்தும் சாப்பிடாவிட்டால் வயிற்றில் அமிலம் சுரந்து நமக்கு பல தொல்லைகளை உண்டாக்கும்

2.அதனால் நம் முன்னோர் உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்று முறைப்படுத்தி வைத்துள்ளனர் .அது பின்வருமாறு


3.பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்.
4.வயிறுமுட்ட உண்பதோ , உணவு உண்டபின் உறங்குவதோ கூடாது.
5.தண்ணீரை மென்று தின்னுவதுப்போல ,அதாவது மெதுவாக ரசித்து ருசித்து  துளி துளியாக பருக வேண்டும்.
6..உணவை குடிக்க வேண்டும் என்பார்கள் அதாவது உணவு வாயில் இருக்கும் போதே கூழாக மென்று உமிழ்நீரோடு பின்பு மெதுவாய் ரசித்து ருசித்து  விழுங்க வேண்டும்.
7.இது போல ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமுண்டு .அதனால்தான் அறுசுவை உணவு என்று கூறினார்கள்