கடுகு எண்ணெயை வயிற்று பகுதியில் தடவி வந்தால் என்ன நேரும் தெரியுமா ?
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது வயிற்று தசைகள் விரிவடைகின்றன .அதனால் குழந்தை பிறந்த பின்னர் வயிற்று பகுதியில் தசைகள் விரிவடைந்த தழும்புகள் மறையாமல் இருக்கின்றன .இதற்கு இயற்கை வைத்தியத்தில் உள்ள தீர்வு பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம் .
1.கடுகு எண்ணெயை அந்த வயிற்று பகுதியில் தடவி வந்தால் தழும்புகள் கொஞ்சமாக மறைய வாய்ப்புள்ளது
2.க்ரீமோ, லோஷனோ, எண்ணெயோ கொண்டு இந்த பிரசவ கால தழும்புகளை வரவிடாமல் செய்ய எந்த வழிகளும் இல்லை.
3.பிரசவத்துக்கு பின் வயிற்றுப் பகுதியின் தசைகளை வளர விடாமல், ஈரப்பதத்துடன் இருக்குமாறு தரமான ஸ்கின் க்ரீம் அல்லது லோஷன் தடவிக் கொள்வது ஓரளவு பலன் தரும்.
4.பிரசவமான 6 முதல் 12 மாதங்களில் இந்தத் பிரசவ தழும்புகள் கொஞ்சம் மறையத் தொடங்கும். அழுத்தமான, அடர் நிறத் தழும்புகள் வெளிற ஆரம்பிக்கும். தழும்புகள் உண்டான சுவடே தெரியாத அளவுக்கு முற்றிலும் மறையும் என்பது சாத்தியமே இல்லை.
5.பெண்களின் பிரசவத்துக்குப் பிறகும் கொஞ்சமும் மாறாமல் உறுத்தும் தழும்புகளைப் போக்க சரும மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்.
6.கிளைகாலிக் அமிலம், Hyaluronic அமிலம் போன்றவை கலந்த சரும க்ரீம்களை மருத்துவர் பரிந்துரைப்பார்.
7.ரெட்டினாய்டு ஆயின்மென்ட்டுகள் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜனை தூண்டுவதில் வேகமாகச் செயல்பட்டு, தழும்புகளை மறைக்கும்
8.என்றாலும், இவற்றை கர்ப்ப காலத்தில் உபயோகிப்பது குழந்தையைப் பாதிக்கும் என்பதால் அந்நாட்களில் தவிர்ப்பதே பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்