×

கண்களின் கீழேயுள்ள கருவளையத்தை தடுப்பது எப்படி ?

 

பொதுவாக பலருக்கும் மிக இள வயதிலேயே கண்ணுக்கு கீழே கரு வளையம் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம் .இந்த கரு வளையம் கண்களுக்கு கீழே உண்டாக பல்வேறு காரணம் உண்டு .நாம் இந்த பதிவில் இந்த கண்ணுக்கு கீழே கரு வளையம் உண்டாவதை எப்படி தடுக்கலாம் என்றும் அதை எப்படி போக்கலாம் என்றும் நாம் காணலாம் .

1.பொதுவாக சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும் .புகைபிடித்தல் பழக்கம் இருப்பவர்களுக்கும் கருவளையம் மற்றும் வயதான தோற்றத்தை ஏற்படுகிறது. எனவே புகைப்பிடிப்பதை அறவே தவிர்த்து விடுவது நல்லது.

2.மேலும் குறைந்த கொலாஜன் உற்பத்தி கண்களுக்குக் கீழே இருண்ட வட்டங்களுக்கு வழிவகுக்கும்,.

3.சிலருக்கு கண்களை அடிக்கடி தேய்க்கும் பழக்கம் இருக்கும் .இப்படி இருந்தால் கருமையான வட்டங்கள் அடிக்கடி தோன்றும்.

4.தோலில் ஏற்படும் அதிகமானபிக்மெண்டேஷன்காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. இது இரும்புச்சத்து, வைட்டமின் , வைட்டமின் , கால்சியம் போன்ற சத்துக்கள் குறைவு காரணமாகவும் ஏற்படுகிறது.

5.சிலர் மனவருத்தம், மனஉளைச்சலால் அவதிப்படுபவர்.அவர்களுக்கு கருவளையம் ஏற்படுகிறது.

6.எனவே எப்போதும் ரிலாக்ஸாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டால் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் கரு வளையத்தை தடுக்கலாம் .

7.அதிகப்படியான வேலை செய்பவர்களுக்கும் கருவளையம் ஏற்படும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதனை தடுக்க முடியும்.

8.உதாரணமாக வெளியே வெயிலில் செல்லும்போதும், கணினியில் வேலை செய்யும் போதும் கண்ணாடி அணிந்தால் கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

9.கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அடிக்கடி கண்களை தேய்ப்பதாலும் கருவளையம் ஏற்படுகிறது.

10.கண்களில் கருவளையத்தை தடுக்க கொலாஜன் உற்பத்தி செய்யும் உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது.